ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்


திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் 1963ல் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வெளியிட்ட ‘தமிழில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம்" நூலிலிருந்து முதல் 200 நாமாவளிகள் இங்கே ! திவ்ய ப்ரபந்தத்திலிருந்து தொகுத்திருக்கிறார்கள்.
 
 
 
 அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி;
 உயர்வற உயர்நலம் உடையவ போற்றி;
 மயர்வள மதிநலம் அருளினாய் போற்றி;
 பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி:
 பூமகள் நாயக போற்றி; ஓசை
 மாமத யானை உதைத்தவ போற்றி;
 அண்டக் குலத்துக் கதிபதி போற்றி;
 பிண்டமாய் நின்ற பிரானே போற்றி;
 அத்தா போற்றி; அரியே போற்றி;
  பத்துடை யடியவர்க் கெளியாய் போற்றி;
  அகவுயிர்க் கமுதே போற்றி; மாயச்
சகடம் உதைத்தாய் போற்றி; ஞானச்
சுடரே போற்றி; சொல்லுளாய் போற்றி;
உடையாய் போற்றி; உத்தமா போற்றி;
அதிர்குரல் சங்கத் தழகா போற்றி;
கதியே போற்றி; கரியாய் போற்றி;
குறளாய் போற்றி; குருமணி போற்றி;
மறையாய் போற்றி; மாதவா போற்றி;
அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி;
சிந்தனைக் கினியாய் போற்றி; சிற்றாயர்
சிங்கமே போற்றி; சேயோய் போற்றி;
அங்கதிர் அடியாய் போற்றி; அசுரர்கள்
நஞ்சே போற்றி; நாதா போற்றி;
பஞ்சவர் தூதா போற்றி; பாரிடம்
கீண்டாய் போற்றி; கேசவா போற்றி;
 
 
நீண்டாய் போற்றி; நிமலா போற்றி;
முதல்வா போற்றி; முத்தா போற்றி;
அழகா போற்றி ; அமுதே போற்றி;
கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி;
அஞ்சனக் குன்றே போற்றி; அஞ்சன
வண்ணா போற்றி; வள்ளலே போற்றி;
அண்ணா போற்றி; அண்ணலே போற்றி;
அச்சுதா போற்றி; அச்சனே போற்றி;
அச்சுவைக் கட்டியே போற்றி; அந்தணர்
சிந்தையாய் போற்றி; சீதரா போற்றி;
அந்த முதல்வா போற்றி; அந்தரம்
ஆனாய் போற்றி; அருவா போற்றி;
வானே தருவாய் போற்றி; வேதப்
பிரானே போற்றி; பிறப்பிலி போற்றி;
இராமா போற்றி; இறைவா போற்றி;
வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி;
அக்கா ரக்கனி போற்றி; அங்கண்
நாயக போற்றி;  நம்பீ போற்றி;
காய்சின வேந்தே போற்றி; அங்கை
ஆழிகொண் டவனே போற்றி; அந்தமில்
ஊழியாய் போற்றி; உலப்பிலாய் போற்றி;
காரணா போற்றி; கள்வா போற்றி;
சீரணா போற்றி; கேசவா போற்றி;
உரையார் தொல்புகழ் உத்தம போற்றி;
அரையா போற்றி; அண்டா போற்றி;
அந்தமில் ஆதியம் பகவனே போற்றி;
அந்தணர் அமுதே போற்றி; ஆநிரை
காத்தாய் போற்றி; கருமணி போற்றி;
கூத்தா போற்றி; குறும்பா போற்றி;
ஆவலன் புடையார் மனத்தாய் போற்றி;
மூவர்கா ரியமும் திருத்துவாய் போற்றி;
மூதறி வாளனே போற்றி; முதுவேத
கீதனே போற்றி; கேடிலி போற்றி;
அடர்பொன் முடியாய் போற்றி; மென்தளிர்
அடியாய் போற்றி; அமலா போற்றி;
அடிமூன் றிரந்தவன் கொண்டாய் போற்றி;
கடவுளே போற்றி; கண்ணாவாய் போற்றி;
அரவப் பகையூர் பவனே போற்றி;
குரவை கோத்த கு.கா போற்றி;
அலரே போற்றி; அரும்பே போற்றி;
நலங்கொள் நாத போற்றி; நான்மறை
தேடி ஓடும் செல்வா போற்றி;
ஆடா வமளியில் துயில்வோய் போற்றி;
மூன்றெழுத் தாய முதல்வா போற்றி;
தோன்றாய் போற்றி; துப்பனே போற்றி;
அலமும் ஆழியும் உடையாய் போற்றி;
கலந்தவர்க் கருளும் கருத்தாய் போற்றி;
அணிவரை மார்ப போற்றி; அரிகுலம்
பணிகொண்டலைகடல் அடைத்தாய் போற்றி;
அரிமுக போற்றி; அந்தணா போற்றி;
உரகமெல் லணையாய் போற்றி; உலகம்
தாயவ போற்றி; தக்காய் போற்றி;
ஆயர்தம் கொழுந்தே போற்றி; யார்க்கும்
அரிநவ போற்றி; அப்பனே போற்றி;
கரநான் குடையாய் போற்றி; கற்பகக்
காவன நற்பல தோளாய் போற்றி;
ஆவினை மேய்க்கும்வல் லாயா போற்றி;
ஆலநீள் கரும்பே போற்றி; அலையார்
வேலை வேவவில் வளைத்தாய் போற்றி;
அப்பிலா ரழலாய் நின்றாய் போற்றி;
செப்பம துடையாய் போற்றி; சேர்ந்தார்
தீவினை கட்கரு தஞ்சே போற்றி;
காவல போற்றி; கற்கீ போற்றி;
குன்றால் மாரி தடுத்தவ போற்றி;
நன்றெழில் நாரண போற்றி; நந்தா
விளக்கே போற்றி; வேதியா போற்றி;
அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி;
சீலா போற்றி; செல்வா போற்றி;
பாலா லிலையில் துயின்றாய் போற்றி;
மிக்காய் போற்றி; ஒண்சுடர் போற்றி;
சக்கரச் செல்வா போற்றி; நலனுடை
ஒருவா போற்றி; ஒண்சுடர் போற்றி;
அருமறை தந்தாய் போற்றி; ஆணிச்
செம்பொன் மேனி எந்தாய் போற்றி;
எம்பிரான் போற்றி; எங்கோன் போற்றி;
உறவு சுற்றம் ஒன்றிலாய் போற்றி;
பிறர்களுக் கரிய வித்தகா போற்றி;
பரமா போற்றி; பதியே போற்றி;
மரகத வண்ணா போற்றி; மறைவார்
விரித்த விளக்கே போற்றி; மன்றில்
குரவை பிணைந்த மாலே போற்றி;
போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி;
மாதுகந்த மாரபா போற்றி; முனிவரர்
விழுங்கும் கோதிலன் கனியே போற்றி;
அழக்கொடி யட்டாய் போற்றி; அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி;
அமரர்க் கமுதம் ஈந்தோய் போற்றி; ஆதி
பூதனே போற்றி; புராண போற்றி;
புனிதா போற்றி; புலவா போற்றி;
தனியா போற்றி; தத்துவா போற்றி;
நச்சுவா ருச்சிமேல் நிற்பாய் போற்றி;
நிச்சம் நினைவார்க் கருள்வாய் போற்றி;
ஆளரி போற்றி; ஆண்டாய் போற்றி;
வாளரக்க ருக்கு நஞ்சே போற்றி;
விகிர்தா போற்றி; வித்தகா போற்றி;
உகங்கள் தொறுமுயிர் காப்பாய் போற்றி;
மல்லா போற்றி; மணாளா போற்றி;
எல்லாப் போருளும் விரித்தாய் போற்றி;
வையந் தொழுமுனி போற்றி; சக்கரக்
கையனே போற்றி; கண்ணா போற்றி;
குணப்பரா போற்றி; கோளரி போற்றி;
அணைப்பவர் கருத்தாய் போற்றி; அந்தணர்
கற்பே போற்றி; கற்பகம் போற்றி;
அற்புதா போற்றி; அற்றவர் கட்கரு
மருந்தே போற்றி; மருத்துவ போற்றி;
இருங்கை மதகளி றீர்த்தாய் போற்றி;
உள்ளுவார் உள்ளத் துறைவாய் போற்றி;
தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி;
வாமா போற்றி; வாமனா போற்றி;
ஆமா றறியும் பிரானே போற்றி;
ஓரெழுத் தோருரு வானவ போற்றி;
ஆரெழில் வண்ண போற்றி; ஆரா
அமுதே போற்றி; ஆதிநீ போற்றி;
கமலத் தடம்பெருங் கண்ணா போற்றி;
நண்ண லரிய பிரானே போற்றி;
கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி;
தொல்லையஞ் சோதி போற்றி; ஞானம்
எல்லையி லாதாய் போற்றி; கவிக்கு
நிறை பொருள் போற்றி; நீதியே போற்றி;
அறந்தா னாகித் திரிவாய் போற்றி;            200.
             வாழ்த்து 200 தொடரும்…….
 
 

பின்னூட்டமொன்றை இடுக