எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 21


அக்நிஹோத்ரம்

தாத தேசிக தாதாசார் ஸ்வாமி

(திருக்குடந்தை)

ஸ்ரீஉப.வே. பட்டு ஸ்வாமிகளுக்குப் பிறகு ஸ்ரீஅக்நிஹோத்ரம் தாததேசிக தாதாசாரியார் ஸ்வாமி ஆசார்யபீடம் வஹித்தாயிற்று. ஸ்ரீஸ்வாமி பால்யத்திலேயே வம்ச பரம்பரைப்படி வேதாத்யானம், வேதலக்ஷணம் கற்று மீமாம்ஸை, ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், இன்னும் பல ஸம்ப்ரதாய க்ரந்தங்களை ஸ்ரீபட்டு ஸ்வாமிகளிடம் காலக்ஷேபங்களைச் செய்து, வேதபாஷ்யம், கல்ப ஸூத்ரங்கள் இவைகளில் அஸாதாரணமான பாண்டித்யத்தைப் பெற்று திருவிதாங்கூர், புதுக்கோட்டை, மைசூர் முதலிய முன்னாள் ராஜாக்கள் நடத்திவந்த பண்டித சபையில் முதல் சம்மானம் அளிக்கப்பட்டு மெச்சி கௌரவிக்கப்பட்டார். ஆசாரம், அனுஷ்டானம், வைராக்யம், வைலக்ஷண்யம் இந்த ஸ்வாமிக்கு ஒரு விசேஷணம்.

கர்மானுஷ்டானத்தில் யாக்ஞ்யவல்க்யாதி ரிஷிகளைப்போல் நெறி தவறியது இல்லை. ஸ்ரீமத் ராமானுஜ ஸித்தாந்தத்தையும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் ஸம்பிரதாயத்தையும் அநேக ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயஸ்தர்களுக்கு காலக்ஷேபங்கள் உபதேசங்கள், உபந்யாஸங்கள் மூலம் பிரசாரம் செய்தும் தேசிக தர்சனத்தின் பரந்த நோக்கத்தையும் அதன் உட்கருத்துக்களையும் திராக்ஷாபாகமாக மனதில் தெளிவுபட ஸாதிப்பது ஒரு சிறப்பு. மேலும் ஸ்வாமிக்கு வேதங்களில் ஆங்காங்கு உத்கோஷிக்கும் வேத வாக்யங்களே ஸ்ரீபாஷ்யகார, ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனால் திருவாய் மலர்ந்தருளி யாயிற்று என்று ஐகண்ட்யம் செய்து கருத்து வேற்றுமை கிடையாது என தெளிவுற ஸாதிப்பது வழக்கம்.

நமது தேசிகதர்சன தீபம் ஸ்ரீ வி.வி. முத்தண்ணாவுக்கு, இந்த ஸ்வாமியிடம் விசேஷ பக்தியும் அன்பும் அதிகம். ஸ்ரீ வி.வி. ஸ்வாமி அடிக்கடி ஸ்ரீதாததேசிக தாதாசாரியார் ஸ்வாமியை “வேதமூர்த்தி” என்று வெகு சிலாக்யமாக கொண்டாடுவது நம் ஸம்பிரதாயஸ்தர்கள் மனதில் இன்றும் இருக்கும். திருக்குடந்தையில் பலகாலமாக நடந்து வருகிற “விசிஷ்டாத்வைத ஸபை”யில் சுமார் 30 ஸம்வத்ஸரங்கள் ஸ்ரீதாததேசிக தாதாசாரியார் ஸதஸ்யராக இருந்து பல வாக்யார்த்தங்களில் கலந்துகொண்டும் உபந்யாஸங்கள் மூலமாகவும் விசிஷ்டாத்வைத வேதாந்தத்தைப் பரப்பி வந்தார். ஸ்ரீஸ்வாமி திருமாளிகையில்  காலையில் ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபங்கள் ஸாதிப்பதும், போதகாசாரியராகவும், மற்ற சமயங்களில் வேத பாஷ்யம், வேத லக்ஷணம், சிரௌதம், மீமாம்ஸா கல்ப ஸூத்ரங்களையும் ஸ்ரீஸ்வாமிகளிடம் நம் ஸம்பிரதாயஸ்தர்களும் இதர வேதாந்திகளும் கற்பதைப் பார்த்தால் ஸ்வாமி திருமாளிகை ஒரு “குருகுலம்” என்று சொல்வது மிகப் பொருத்தம். ஸ்ரீமத் ராமாநுஜ ஸித்தாந்தத்தையும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களையும் ஸ்ரீஸ்வாமிகளிடம் காலக்ஷேபங்கள் செய்த பல தனவந்தர்களும், பண்டிதர்களும், சிஷ்ய கோடிகளும் ஆங்காங்கு பல பாகங்களில் இருக்கின்றனர்.

வம்ச பாரம்பர்யப்படி, பட்டு ஸ்வாமிகளுக்குப் பிறகு ஆசார்ய ஸ்தானத்தை வகித்து சிஷ்யகோடிகளுக்கு ஸமாச்ரயணம் மந்திரோபதேசம், ப்ரபத்தி முதலியவைகளை செய்து வந்தார்.

ஸ்ரீஸ்வாமிகளால் எழுதப்பட்டுள்ள கிரந்தங்கள் “ஸூத்ரானுகுண்யஸித்தி விமர்சனம்”. இந்த நூல் லலிதமான முறையில் அத்வைத ஸித்தாந்தத்திற்கு “ப்ரும்ம சூத்ரம்” பொருந்தாது என்று நிரூபிக்கிறது. “த்ரவிடாத்ரேய தர்சனம்” என்ற க்ரந்தம் அத்வைதிகள் த்ரவிட பாஷ்யகாரரைப் பற்றியும் வ்ருத்திகாரர்களைப் பற்றியும் சொல்லும் வாதங்களைக் கண்டித்து பகவத் ராமாநுஜ ஸித்தாந்தத்தை ஸ்தாபிப்பது. “வேத நவனீதம்” என்ற நூல் விசிஷ்டாத்வைத வேதாந்தம்தான் வேதத்தின் அடிப்படையான தத்வம் என்று நிரூபிக்கிறது.

ஸ்ரீஸ்வாமிகள் சென்னை, மைசூர் சர்வகலாசாலைகளில் விசிஷ்டாத்வைத வேதாந்தத்திற்கு பரீக்ஷாதிகாரியாகவும், பல இடங்களில் நடத்தப்பட்ட விசிஷ்டாத்வைத ஸதஸுகளில் ஸதஸ்யராகவும் பணியாற்றி இருக்கிறார். ஸ்வாமியின் பாண்டித்யத்தைப் பாராட்டி “ச்ருதி ஸ்மிருதி மீமாம்ஸா கல்ப ஸூத்ர விசாரத” “வேத பாஷ்ய ப்ரவீண” என்ற விருதுகளால் மைசூர், திருவிதாங்கூர்களில் பாராட்டினார்கள்.

வேதங்கள், வேதபாஷ்யங்கள், விசிஷ்டாத்வைத வேதாந்தம், மீமாம்ஸா, கல்ப ஸூத்ரங்கள் இவைகளில் ஸ்வாமிக்கு உள்ள அபார பாண்டித்யத்தை மெச்சி நமது பாரத ராஷ்ட்ரபதியால் 1962ல் கௌரவிக்கப் பட்டார்.

ஸ்வாமிகள் 60 ஸம்வத்ஸரங்களுக்கு மேல் வேதத்திற்கும் ஸ்ரீபகவத் ராமானுஜ ஸித்தாந்தத்திற்கும் தேசிக தர்சனத்திற்கும் பாடுபட்டு ஸ்வாமியின் 84-வது திருநக்ஷத்திரத்தில் திருநாட்டை அலங்கரித்தாயிற்று.

இந்த ஸ்வாமியின் தனியன்

ஸ்ரீசைல வம்ச கலசோததி பூர்ணசந்த்ரம்
          ஸ்ரீவாஸதாத மகிவர்ய க்ருபாந்த போதம்
தம் ஸுந்ரார்யதநயம் ததுபாத்த மந்ரம்*
        ஸ்ரீவேங்கடேச குருவர்யமஹம் ப்ரபத்யே

(மாசி அனுஷம்)

(அடியேன்.

*இது அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை. நூலில் உள்ளதை அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன். )

பின்னூட்டமொன்றை இடுக