ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்


                         2.

புறந்தொழு வார்க்குப் பொய்யன் வாழ்க;
மறைம லர்ச்சுடர் வாழ்க; மறையோர்
கண்ணான் வாழ்க; கவியளான் வாழ்க;
பண்ணுளான் வாழ்க; பண்பன் வாழ்க;
மண்மகள் கேள்வன் வாழ்க;  மாக
விண்முதல் நாயகன் வாழ்க; வித்தகப்
பிள்ளை வாழ்க; பித்தன் வாழ்க;
ஒள்ளியான் வாழ்க; உயர்ந்தான் வாழ்க;
மண்பகர் கொண்டான் வாழ்க; நறுவிய
தண்துழாய் வேதியன் வாழ்க; மண்புரை
வையம் இடத்த வராகன் வாழ்க;
அய்யன் வாழ்க; ஆத்தன் வாழ்க;
பரிவாய் மீண்ட சீரான் வாழ்க;
கரிய முகில்புரை மேனியன் வாழ்க;
கலையார் சௌற்பொருள் வாழ்க; தெய்வத்
தலைவன் வாழ்க; தஞ்சன் வாழ்க;
பண்புடை வேதம் பயந்தான் வாழ்க;
வெண்புரி நாலுடை மார்பன் வாழ்க;
தனிமாத் தெய்வம் வாழ்க; அமரர்
முனிவர் விழுங்குங்கன் னற்கனி வாழ்க;
ஏலு மறைப் பொருள் வாழ்க; இறப்பெதிர்
காலக் கழிவும் ஆனவன் வாழ்க;
இன்பன் வாழ்க; ஈசன் வாழ்க;
அன்பன் வாழ்க; அறவன் வாழ்க;
அறமுய லாழிப் படையவன் வாழ்க;
உறியார் வெண்ணெயுண் டுகந்தான் வாழ்க;
செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க;
சுந்தரன் வாழ்க; சூழ்ச்சி ஞானச்
சுடரொளி வாழ்க; சோதீ வாழ்க;
உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க;
ஆடற் பறவையன் வாழ்க; எடுப்பும்
ஈடுமில் ஈசன் வாழ்க; உட்குடை
அசுரர்  உயிரெலா முண்டவன் வாழ்க;
பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க;
எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க;
எண்ணன் வாழ்க; எண்ணுவா ரிடரைக்
களைவான் வாழ்க; கற் றாயன் வாழ்க;
கிளரொளி மாயன் வாழ்க; காள
மேகம் வாழ்க; மெய்ம்மை வாழ்க;
நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க;
வேதன் வாழ்க; வீடுடையான் வாழ்க;
போதகம் வீழப் பொருதான் வாழ்க;
வைய முதல்வன் வாழ்க; ஆண் டளக்கும்
ஐயன் வாழ்க; அரங்கன் வாழ்க;
ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க;
ஊற்றம் உடையான் வாழ்க; செங்கட்
கருமுகில் வாழ்க; காரணம் கிரிசை
கரும முதல்வன் வாழ்க; கன்னலின்
கட்டியே வாழ்க; கரிய குழலுடைக்
குட்டன் வாழ்க; கூற்றம் வாழ்க;
கருவினை வண்ணன் வாழ்க; கருமமும்
கரும பலனும் ஆவோன் வாழ்க;
தேவர் விருத்தன் வாழ்க; தேவர்க்கும்
தேவன் வாழ்க; தெய்வம் மூவரில்
முதல்வன் வாழ்க; முகுந்தன் வாழ்க;
சதிரன் வாழ்க; சந்தோகன் வாழ்க;
சுடர்கொள் சோதீ வாழ்க; கடலுள்
கிடந்தவன் வாழ்க; கேழல் வாழ்க;
பவித்திரன் வாழ்க; பரபரன் வாழ்க;
திவத்தை யருள்பவன் வாழ்க; கணக்கறு
தலத்தனன் வாழ்க; நம்பன் வாழ்க;
நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க;
பீதக ஆடையன் வாழ்க; வேள்வியும்
வேதமு மானான் வாழ்க; வேண்டிற்று
எல்லாம் தருபவன் வாழ்க; யார்க்கும்
நல்லான் வாழ்க; நம்பிரான் வாழ்க;
கூடாரை வெலுஞ்சீர்க் கோவிந்தன் வாழ்க;
ஓடாப் படையான் வாழ்க; மண்ணிக்
குறுங்கயிற் றாற்கட் டுண்டவன் வாழ்க;
நிறங்கிளர் சோதி நெடுந்தசை வாழ்க;
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் வாழ்க;
மறைப்பொருள் வாழ்க; மாயன் வாழ்க;
மன்ற மரக்கூத் தாடினான் வாழ்க;
என்றும் அரியான் வாழ்க; ஆழியால்
அன்றங் காழியை மறைத்தான் வாழ்க;
வென்றிநீர் மழுவன் வாழ்க; வினைதீர்
மருந்தே வாழ்க; மணியே வாழ்க;
அருந்தேவன் வாழ்க; அழகன் வாழ்க;
அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க;
தன்னடி யார்மனத் தென்றும்தேன் வாழ்க;
மனத்துக் கினியான் வாழ்க; மாசற்றார்
மனத்துளான் வாழ்க; மணிக்குன்று வாழ்க;
மதிகோள் விடுத்த தேவன் வாழ்க;
மதியில் நீசர்சென் றடையான் வாழ்க;
முடிகளா யிரத்தான் வாழ்க; அவனி
அடிமூன் றிரந்து கொண்டவன் வாழ்க;
அமுதங் கொண்டான் வாழ்க; அமரர்தம்
அமுதே வாழ்க; அறிவன் வாழ்க;
ஆயிரம் பேருடை யம்மான் வாழ்க;
ஆயன் வாழ்க; ஆதியான் வாழ்க;
பணிலம்வாய் வைத்தான் வாழ்க; கன்று
குணிலா எறிந்தான் வாழ்க; கொள்ளக்
குறைவிலன் வாழ்க; கோவலன் வாழ்க;
மறுகலி லீசன் வாழ்க; மறைநான்கும்
ஓதினான் வாழ்க; ஊழி வாழ்க;
ஆதியம் புருடன் வாழ்க; ஆயர்க்கு
அதிபதி வாழ்க; ஆளன் வாழ்க;
நிதியன் வாழ்க; நெடுமால் வாழ்க;
படிவான மிறந்த பரமன் வாழ்க;
தடவரைத் தோளன் வாழ்க; தூய
பெருநீர் யமுனைத் முறைவன் வாழ்க;
எரிநீர் வளிவான் மண்ணான் வாழ்க;
கல்விநாதன் வாழ்க; பயில்நூல்
நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க;
பூவணை வாழ்க; பூவனை மேவிய
தேவி மணாளன் வாழ்க; மைதோய்
சோதி வாழ்க; தூயான் வாழ்க;
ஆதி வராகமும் ஆனான் வாழ்க;
ஆழியங் கையில் கொண்டான் வாழ்க;
வேழப் போதகம் வாழ்க; அசுரரைத்
துணிப்பான் வாழ்க; துயக்கன் வாழ்க;
கணக்கில் கீர்த்தியான் வாழ்க; அடியார்க்கு
அருள்பவன் வாழ்க; அண்டமூ டுருவப்
பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க; அஞ்சன
மேனியன் வாழ்க; வெள்ளை மூர்த்தி
ஆனவன் வாழ்க; அருங்கல வுருவின்
ஆயர் பெருமகன் வாழ்க; தலைகண்
ஆயிரமுடையான் வாழ்க; அடியார்க்கு
மெய்யன் வாழ்க; மின்னும் ஆழியங்
கையன் வாழ்க; காலிகள் மேய்க்க
வல்லவன் வாழ்க; வல்லான் வாழ்க;
அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க;
எய்ப்பினில் வைப்பே வாழ்க; அண்டத்
தப்புறத் துய்த்திடும் ஐயன் வாழ்க;
அணிகொள் மரகதம் வாழ்க; தாள் அடைந்தார்க்கு
அணியன் வாழ்க; அனந்தன் வாழ்க;
அமுதினு மாற்ற இனியான் வாழ்க;
தமர்கட் கெளியான் வாழ்க; தேவகி
சிறுவன் வாழ்க; சிட்டன் வாழ்க;
அறிவுப்பயன் வாழ்க; ஆவி வாழ்க;
வானோர் நாயன் வாழ்க; தனக்குத்
தானே உவமன் வாழ்க; தேடற்கு
அறியவன் வாழ்க; ஆட்கொள்ள வல்ல
பெருமாள் வாழ்க; பெருந்தகை வாழ்க;
பேதியா இன்ப வெள்ளம் வாழ்க;
வேதநல் விளக்கே வாழ்க; வேதப்
புனிதன் வாழ்க; புணைவன் வாழ்க;
கனிவார் வீட்டு இன்பம் வாழ்க;
கங்கை போதரக் கால் நிமிர்ந்தான் வாழ்க;
நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க;
யாதவன் வாழ்க; யாழிசை வாழ்க;
ஆதியம் பெருமான் வாழ்க; வேதம்
கண்டான் வாழ்க; கைம்மா துன்பம்
விண்டான் வாழ்க; விண்ணாளி வாழ்க;
வில்லான் வாழ்க; விபீட ணற்கு
நல்லான் வாழ்க; நரநா ரணனாய்
அறநூல் விரித்தான் வாழ்க; வேள்வியில்
குறளாய் நிமிர்ந்த வஞ்சன் வாழ்க;
அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க;
கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க;
அமரர் கோமான் வாழ்க; என்றும்
இமையவர்க் கரியான் வாழ்க; இமையவர்
குலமுதல் வாழ்க; குலக்குமரன் வாழ்க;
அலைகடல் வண்ணன் வாழ்க; அலைகடற்
பள்ளியான் வாழ்க; பரமேட்டி வாழ்க;
வெள்ளத் தரவில் துயின்றான் வாழ்க;
குன்றா ரும்திறல் தோளன் வாழ்க;
கன்றால் விளவெறிந்த காளை வாழ்க;            400

                         தொடர்வது  "வெல்க "

பின்னூட்டமொன்றை இடுக